Monday 5 October 2015

நோபல் பரிசு 2015 ‍ -மருத்துவம் மற்றும்  உடல்இயங்கியல் (Nobel Prize for 2015 Medicine or Physiology) 


   
இவ்வருடத்திற்கான நோபல் பரிசு விருதிற்கான கணக்கினை ஜப்பானியர்கள் தொடங்கி விட்டார்கள்.

2015 ஆம் வருடத்திற்கான மற்றும்  உடல்இயங்கியலுக்கான‌ நோபல் பரிசினை ஜப்பான் நாட்டின் கிதாசதோ பல்கலைக் கழகத்தினை (Kitasato University) சேர்ந்த  பேராசிரியர் சதோசி ஒமுரா (Prof. Satoshi Omura), அமெரிக்காவின் டிரூ பல்கலைக் கழக பேராசிரியர் வில்லியம் சி கேம்ப்பெல் (Prof. William  C. Campbell)  மற்றும் சீன பாரம்பரிய மருத்துவ கழகத்தில் ( China Academy of Traditional Chinese Medicine)  தலைமை பேராசிரியராக இருக்கும் பேராசிரியர் யொயொ-து (Prof Youyou Tu) அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

உலகையே அச்சுறுத்திய தொற்று நோய்களான யானைக்கால் வியாதி(Elephantiasis), மலேரியா (Malaria), நதிக் குருடு நோய் (River Blindness) ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி மற்றும் பூச்சிகளை பற்றிய ஆய்விற்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களின் பிரத்யோக ஆராய்ச்சியானது இந்த தொற்று நோய்களை குணப்படுத்த தேவையான புதிய மருத்துவ சிகிச்சை வழிகளை திறந்து விட்டமைக்கான‌  அங்கீகாரமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வருட விருதின் மூலம் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு பட்டியலில் சீனா காலடி எடுத்து வைக்கிறது. 

(மருத்துவ துறை சார்ந்த ஆய்வில் தாய்மொழி வழிக் கல்வி சாதிக்குமா என்ற ஐயப்பாட்டிற்கு முடியும் என்று உலகிற்கு  ஜப்பானும், சீனாவும் சாதித்து காட்டி இருக்கிறது)


Prof. Satoshi Ōmura

Prof. Youyou Tu

Prof.William C. Campbell 

Credit: Nobelprize.org

No comments:

Post a Comment